சினிமா செய்திகள்

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் - சுந்தர்.சி + "||" + 'Iruttu' A new type of ghost movie - Sundar.C

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் - சுந்தர்.சி

‘இருட்டு’ புதுமாதிரியான பேய் படம் - சுந்தர்.சி
சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. வி.இசட் துரை இயக்கி உள்ளார்.
சாக்‌ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர். கிரிஷ் இசையமைத்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சுந்தர்.சி கூறியதாவது:-

“நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னொரு இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விஷயங்கள் இருக்கும். முழுக்க பயப்படுகிற மாதிரி ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். துரை திறமையான இயக்குனர். இருட்டு படத்தை சிறப்பாக எடுத்துள்ளார்.

இந்தப்படம் புதுமாதிரியான பேய் படமாக இருக்கும். நானே பார்த்து மிரண்டு விட்டேன். ஒவ்வொரு காட்சியும் சீட் நுனிக்கு இழுக்கும். படத்தில் முத்த காட்சியும் நெருக்கமான காட்சிகளும் உள்ளன. கதைக்கு தேவை என்பதால் முத்த காட்சியில் நடித்தேன். படுக்கை அறை காட்சிகளை படமாக்கியபோது எனது மனைவி படப்பிடிப்புக்கு வந்து இருந்தார்.

அப்போது இயக்குனர் அதிக டேக்குகள் எடுத்து அந்த காட்சிகளை படமாக்கியது தர்ம சங்கடமாக இருந்தது.”

இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.