ஆரி, உடல் எடையை 10 கிலோ குறைத்தார்
புதிய படத்துக்காக நடிகர் ஆரி தனது உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார்.
ஆரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னை டி.ஆர்.கார்டனில் தொடங்கியது. இதில், ஆரி ஜோடியாக ஐதராபாத்தை சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிகிறார். இவர், ‘ரங்கஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தவர். சி.வி.மஞ்சுநாதன் தயாரிக்கிறார். எஸ்.காளிங்கன், கதை-திரைக் கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். இவர், ‘என்றென்றும் புன்னகை, ரிச்சி ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
இந்த படத்துக்காக கதாநாயகன் ஆரி தனது உடல் எடையை 10 கிலோ குறைத்து இருக்கிறார். படத்தை பற்றி தயாரிப்பாளர் சி.வி.மஞ்சுநாதன் கூறுகையில், “இது, ஹாலிவுட் பாணியில் தயாராகி இருக்கும் படம். கதையை டைரக்டர் சொன்னதுமே படத்தை தயாரிப்பது என்று முடிவு செய்து விட்டோம்” என்றார்.
Related Tags :
Next Story