சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம் + "||" + Comedian Satish is married

நகைச்சுவை நடிகர் சதீஷ் திருமணம்

நகைச்சுவை  நடிகர்  சதீஷ்  திருமணம்
சென்னையில் நகைச்சுவை நடிகர் சதீஷ்-சிந்து திருமணம் நடந்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் மெரினா, தமிழ் படம், மதராச பட்டணம், வாகை சூடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், கலகலப்பு-2, சிக்ஸர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சதீசுக்கும், வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் சாக்சியின் தங்கை சிந்துவுக்கும் திருமணம் நிச்சயமானது. சதீஷ்-சிந்து திருமணம் நேற்று காலை சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் நடந்தது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத இந்துமுறைப்படி மணமகள் சிந்து கழுத்தில் சதீஷ் தாலி கட்டினார்.

திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ராதாரவி, சிவகார்த்திகேயன், ஜீவா, உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக், அதர்வா, நடிகைகள் இந்துஜா, அதுல்யா, இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...