நடிகர் மோகன்லாலுக்கு ‘திடீர்’ ஆபரேஷன்


நடிகர் மோகன்லாலுக்கு ‘திடீர்’ ஆபரேஷன்
x
தினத்தந்தி 22 Dec 2019 11:20 PM GMT (Updated: 2019-12-23T04:50:46+05:30)

பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவர் தமிழில் இருவர், ஜில்லா, காப்பான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம், பிக் பிரதர். சித்திக் இயக்கி உள்ள இந்த படத்தில், அர்பாஸ் கான், அனூப் மேனன், ஹனி ரோஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் மோகன்லால், முகநூலில் டாக்டர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கையில் கட்டுப்போடப்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் கையை பத்திரமாக பார்த்து கொண்டதற்கு துபாய் பர்ஜீல் மருத்துவமனை் டாக்டர் புவனேஷ்வர் மச்சானிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

சில நாட்களாகவே அவர் கையில் காயத்துடன் இருந்து வந்தார். சில நிகழ்ச்சிகளில் கையில் பேண்டேஜூடன் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் துபாய் சென்று ஆபரேஷன் செய்துள்ளார். அவர் விரைவாக குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Next Story