சினிமா செய்திகள்

“வெற்றியை தொலைவில் இருந்து ரசிக்க வேண்டும்” - பட விழாவில் தனுஷ் பேச்சு + "||" + Success must be enjoyed from afar - Dhanush talks at the film festival

“வெற்றியை தொலைவில் இருந்து ரசிக்க வேண்டும்” - பட விழாவில் தனுஷ் பேச்சு

“வெற்றியை தொலைவில் இருந்து ரசிக்க வேண்டும்” - பட விழாவில் தனுஷ் பேச்சு
வெற்றியை தொலைவில் இருந்து ரசிக்க வேண்டும் என்று பட விழாவில் நடிகர் தனுஷ் பேசினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-மஞ்சுவாரியர் நடித்த அசுரன் படம் வெற்றி பெற்றது. அசுரன் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது:-

“அது ஒரு கனா காலம் படத்தில் நடித்தபோது எனக்கு 20 வயது. பாலுமகேந்திராவிடம் குறிப்பிட்ட காட்சியை உதவி இயக்குனரான வெற்றி மாறனிடம் நடித்து காட்ட சொல்லுங்கள் என்று சொன்னேன். அவரும் அற்புதமாக நடித்து காட்டினார். அன்று முதல் நானும் வெற்றிமாறனும் சகோதரர்களாகவே பழகி வருகிறோம்.


அசுரன் படத்தின் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்த அவருக்கு நன்றி. இதுபோன்ற கதாபாத்திரம் மீண்டும் அமையாது. அசுரன் படம் வெளியானபோது லண்டனில் இருந்தேன். படம் எப்படி போகுமோ என்று பதற்றமாக இருந்தது. படம் வெற்றி பெற்ற தகவலை அறிந்தபோது நான் தொலைவில் இருந்தேன்.

தோல்வியைத்தான் தழுவிக்கொள்ள வேண்டும். வெற்றியை தூரமாக நின்றுதான் ரசிக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மை எப்படி சேதப்படுத்தும் என்று தெரியாது. நம்மை எப்போது எங்கே வைக்க வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும். அதனால்தான் இந்த வெற்றி கிடைக்கும்போது என்னை தொலைவில் வைத்தார். எனக்கு நண்பர்கள் குறைவு. ஆயிரம் நண்பர்கள் இருப்பதை விட உண்மையான ஒரு நண்பர் இருந்தால் போதும்.” இவ்வாறு தனுஷ் பேசினார்.

இயக்குனர்கள் வெற்றி மாறன், பாலாஜி சக்திவேல், வெங்கடேஷ், தயாரிப்பாளர் தாணு, அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - நாராயணசாமி நம்பிக்கை
காமராஜ் நகர் தொகுதியில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள சுற்றுச்சூழல் துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, வினாடி- வினா போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது.