சினிமா செய்திகள்

ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு + "||" + Perarasu, Robo Shankar support To Rajini

ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு

ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு
நடிகரும், டைரக்டருமான பேரரசு மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பெரியார் பற்றி ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர். “நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது” என்று ரஜினி கூறி விட்டார். இதனால் ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தன.

போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு காங்கிரசை சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்தார். ரஜினிகாந்தின் புதிய படத்தில் குஷ்பு நடித்து வருகிறார்.

இதுபோல் நடிகரும், டைரக்டருமான பேரரசு மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் ஆகியோரும் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “பெரியாரை பற்றி பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமானால் இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரோபோ சங்கர், “தலைவர் எப்போதும் உண்மையே பேசிவிடுகிறார். உண்மையை சொன்னால் ஏன் சிலபேருக்கு எரியுது என்று தெரியவில்லை” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...