சினிமா செய்திகள்

வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம் ரஜினி படத்தின் பெயர் என்ன? + "||" + What is the name of the Rajni film?

வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம் ரஜினி படத்தின் பெயர் என்ன?

வைரலாகும் மன்னவன், அண்ணாத்த, வியூகம்  ரஜினி படத்தின் பெயர் என்ன?
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
தர்பார் படத்துக்கு பிறகு சிவா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இது ரஜினிக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் உள்ளனர். ரஜினிகாந்த் 2 பெண்டாட்டிக்காரராக நடிப்பதாகவும், குஷ்புவும், மீனாவும் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் தகவல் பரவி உள்ளது.

சித்தார்த், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோரும் நடிக்க உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது. ரஜினிகாந்த், குஷ்பு, மீனா இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினியின் அறிமுக பாடல் காட்சியையும் படமாக்கினர்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் பெயர் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏற்கனவே வியூகம் என்ற பெயரை வைக்க சிவா முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. தற்போது மன்னவன், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை பரிசீலிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்த பெயர்களில் ஒன்று தேர்வு செய்யப்படுமா? அல்லது வேறு பெயர் வைக்கப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும். இந்த படத்தை தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.