சினிமா செய்திகள்

மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை + "||" + Mumbai: TV actress Sejal Sharma allegedly committed suicide

மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை

மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை
மும்பையில் டி.வி. நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,

ராஜஸ்தானின் உதய்பூர் நகரை சேர்ந்தவர் செஜல் சர்மா (வயது 25).  கடந்த 2017ம் ஆண்டு நடிப்பு துறையில் பணிபுரிவதற்காக மும்பைக்கு சென்றுள்ளார்.  சில விளம்பர படங்களில் நடித்துள்ள அவர் அதன்பின் ஸ்டார் பிளஸ் சேனலில் வெளிவரும் 'தில் தோ ஹேப்பி ஹை ஜி' என்ற நிகழ்ச்சியில் முதன்முறையாக நடிக்க தொடங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் சிம்மி கோஸ்லா என்ற பெயரில் நடித்து உள்ளார்.

'ஆசாத் பரிந்தே' என்ற வலைதள தொடரிலும் அவர் நடித்துள்ளார்.  இந்த நிலையில், நேற்றிரவு தனது குடியிருப்பில் வைத்து அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அவருடன் 2 நண்பர்களும் இருந்துள்ளனர்.  இச்சம்பவம் பற்றி அறிந்து சென்ற போலீசார் தற்கொலை குறிப்பு ஒன்றை பறிமுதல் செய்து உள்ளனர்.  இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தகவல் அவரது பெற்றோருக்கு இன்று காலை தெரிய வந்துள்ளது.  இதன்பின் அவரது உடல் இறுதி சடங்கிற்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி கலவரம்: போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
டெல்லி கலவரம் தொடர்பாக போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து உள்ளது.
2. கடலோர கிராமங்களில் ஒத்திகை: கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 9 பேர் பிடிபட்டனர்
கடலோர கிராமங்களில் நடைபெற்ற ஒத்திகையின்போது கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 9 பேரை போலீசார் பிடித்தனர்.
3. நாளை கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் டி.ஜி.பி. திரிபாதி ஆய்வு
தஞ்சை பெரியகோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு பணியில் 5,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி நேற்று ஆய்வு செய்தார்.
4. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி குமரி கடல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
5. டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல்: உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
டெல்லியில் போலீசார்-வக்கீல்கள் மோதல் சம்பவத்தில், உள்துறை மந்திரி அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுந்துள்ளது.