சினிமா செய்திகள்

கார்த்திக் நரேன் இயக்குகிறார்; சத்யஜோதி பிலிம்சின் இன்னொரு படத்தில், தனுஷ்! + "||" + Directed by Karthik Narain; In another film by Satyajodi Films, Dhanush!

கார்த்திக் நரேன் இயக்குகிறார்; சத்யஜோதி பிலிம்சின் இன்னொரு படத்தில், தனுஷ்!

கார்த்திக் நரேன் இயக்குகிறார்; சத்யஜோதி பிலிம்சின் இன்னொரு படத்தில், தனுஷ்!
‘மூன்றாம் பிறை’ உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த பட நிறுவனம், டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘பட்டாஸ்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘பட்டாஸ்’  படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு புதிய படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார். இவர், ‘துருவங்கள் பதினாறு,’ ‘மாபியா,’ ‘நரகாசுரன்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர். இது, தனுஷ் நடிக்கும் 43-வது படம். இதில், அவருக்கு ஜோடியாக ஒரு பிரபல நாயகி நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் முடிவாகவில்லை. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன் ஆகிய படங்களை தொடர்ந்து தனுசுடன் ஜீ.வி.பிரகாஷ்குமார் கைகோர்க்கும் 5-வது படம், இது.

தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் ஜோடியாக ஹன்சிகா
தனுஷ் ஜோடியாக ஹன்சிகா நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’
தனுசின் ‘அசுரன்’ சீன மொழியில் ‘ரீமேக்’ செய்யப்பட உள்ளது.