வெப் தொடர்களுக்கு வரும் நடிகைகள்


வெப் தொடர்களுக்கு வரும் நடிகைகள்
x
தினத்தந்தி 10 Feb 2020 12:36 AM GMT (Updated: 2020-02-10T06:06:45+05:30)

வெப் தொடர்களில் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் வருகிறார்கள் என்ற நிலை மாறி முன்னணி கதாநாயகிகளும் நடிக்க வருகிறார்கள்.

இணைய தள தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு, அதிக சம்பளம் ஆகிய காரணங்கள் அவர்களை வெப் தொடர்கள் பக்கம் இழுக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோரும் ‘கரோலின் காமாட்சி’ வெப் தொடரில் மீனாவும் நடித்துள்ளனர். நித்யாமேனன், பிரியாமணி, காஜல் அகர்வால், தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை நமீதா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அமலாபால் இந்தி வெப் தொடரில் நடிக்கிறார். இந்த தொடரை பிரபல இயக்குனர் மகேஷ் பட் உருவாக்குகிறார். இவர்கள் வரிசையில் தற்போது ரீமா கல்லிங்கலும் இந்தி வெப் தொடரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடருக்கு ஜிந்தகி இன் ஷார்ட் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் 7 கதைகள் இடம் பெறுகின்றன.

ரீமா கல்லிங்கலுடன் சஞ்சய் கபூர், ரீனா குப்தா, திவ்யா தத்தா ஆகியோரும் நடிக்கின்றனர். வருகிற 19-ந்தேதி முதல் இந்த தொடர் வெளியாகிறது. இதன் முதல் தோற்ற போஸ்டரை ரீமா கல்லிங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரீமா கல்லிங்கல் பரத்தின், யுவன் யுவதி, ஜீவாவின் கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Next Story