ரசிகர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம் பட விழாவில் ஜீவா பேச்சு


ரசிகர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம்  பட விழாவில் ஜீவா பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2020 10:45 PM GMT (Updated: 10 Feb 2020 5:55 PM GMT)

அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ்ப்படம் எடுப்பது கஷ்டம் என்று பட விழாவில் ஜீவா பேசினார்.

டேக் ஓ.கே கிரியே‌ஷன்ஸ் சார்பில் ராஜன் தயாரிக்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் வில்லனாக  நடித்துள்ள இந்த படத்தை எம்.வி.கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கிறார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசியதாவது,

‘‘இங்கு யாருமே தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாருமே உண்மையாகத்தான் உழைக்கிறார்கள். எல்லோருடைய திறமையும் ஒருநாள் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படும். ஜித்தன் ரமேசுக்கு டர் ஸ்டைலில் சாருக்கானுக்கு அமைந்த மாதிரி இந்த படம் அமையும். 

ராம் படம் நடிக்கும்போது எனது கதாபாத்திரம் வில்லனா, கதாநாயகனா என்று தெரியாமல் இருந்தேன். ரசிகர்களும் அப்போது வெகுளியாக இருந்தார்கள். ஆனால் இப்போது தெளிவாகி விட்டனர். ஆங்கிலப்படம் கூட எல்லோரையும் திருப்திப்படுத்தும்படி எடுத்து விடலாம். ஆனால் அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ்ப்படம் எடுப்பது கஷ்டம். 

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்திப்படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும். காரணம் டிரைலர் மிக வித்தியாசமாக இருப்பதால் நிச்சயம் இப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஜீவா பேசினார்.

விழாவில் ஜித்தன் ரமேஷ், நடிகை ஹீனா ஸஹா, இசையமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் பேசினர்.

Next Story