சினிமா செய்திகள்

பியர் கிரில்ஸூடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியீடு + "||" + Motion poster release of the show featuring actor Rajinikanth with Pierre Grills

பியர் கிரில்ஸூடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியீடு

பியர் கிரில்ஸூடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற INTO THE WILD WITH BEAR GRYLLS நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.
லண்டன்,

டிஸ்கவரி குழும சேனல்களில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தை சேர்ந்த சாகச வீரர் பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று சவால்களை சந்தித்து மேற்கொள்ளும் இந்த ஆபத்தான பயணத்தில் தன்னுடன், சிறப்பு விருந்தினர்களாக பிரபலங்களை அழைத்து செல்வது வாடிக்கை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவையும், ஆபத்தான பயணத்துக்கு அவர் அழைத்து சென்றது உண்டு. யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு இந்திய பிரதமர் மோடி, பியர் கிரில்சுடன் காட்டுக்குள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் அடர்ந்த காட்டுக்குள், நடுங்க வைக்கும் குளிரில் பிரதமர் மோடியும், பியர் கிரில்சும் மேற்கொண்ட சாகச பயணம் புல்லரிக்க வைத்தது. இந்த பயணம் தொடர்பான நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஆகஸ்டு மாதம் 12ந்தேதி ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு பிறகு தமிழ் திரையுலக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமாரும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பியர் கிரில்சுடன் சாகச பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை டிஸ்கவரி குழும சேனல் செய்தது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடனான சாகச பயணம், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் பந்திப்பூர் தேசிய பூங்காவில் நடந்தது.

இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்களின் விலை பட்டியல் வெளியீடு
தமிழக பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்களுக்கான விலை பட்டியலை தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ளது.
2. சென்னையில் தொழிற்பேட்டை இயங்க வழிகாட்டு நெறிமுறைகள்; தமிழக அரசு வெளியீடு
சென்னையில் தொழிற்பேட்டை இயங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
3. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியீடு
தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளன.
4. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
5. 2020-21-ம் ஆண்டுக்கான மாநகராட்சி ‘பட்ஜெட்’ வெளியீடு திடக்கழிவு மேலாண்மைக்கு 100 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டம்
2020-21-ம் ஆண்டுக்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட் நேற்று வெளி யிடப்பட்டது. திடக்கழிவு மேலாண்மைக்கு 100 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.