சர்ச்சையில் சிக்கிய தனுசின் ‘கர்ணன்’


சர்ச்சையில் சிக்கிய தனுசின் ‘கர்ணன்’
x
தினத்தந்தி 20 Feb 2020 11:56 PM GMT (Updated: 2020-02-21T05:26:20+05:30)

‘கர்ணன்’ தலைப்பை தனுஷ் பயன்படுத்தக் கூடாது என்று சர்ச்சை எழுந்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கும் ‘கர்ணன்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ராஜிஷா, லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கவுரி கிஷன் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. கர்ணன் சிவாஜி கணேசன் நடித்த படத்தின் தலைப்பு ஆகும்.

இந்த தலைப்பை தனுஷ் படத்தில் பயன்படுத்தக் கூடாது என்று சிவாஜி ரசிகர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையும் தனுஷ் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Next Story