சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை + "||" + Shilpa Shetty-Raj Kundra blessed with a baby girl

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மும்பை,

தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார்.

அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், 44 வயதான ஷில்பா ஷெட்டி, 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையை வரவேற்று பதிவு எழுதியுள்ளார்.   பிப்ரவரி 15 அன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு சமீஷா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  வாடகைத் தாய் முறை மூலம் இந்தக் குழந்தை பிறந்துள்ளது.

ராஜ் குந்த்ரா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரான சமீஷா ஷெட்டி குந்த்ராவை அறிவிப்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை வெளிப்படுத்த முடியாது.  பெண் குழந்தை பிறந்துள்ளார். நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் மீது மோசடி புகார்; போலீஸ் விசாரணை
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் சத்யுக் என்ற தங்க வியாபார நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்தனர்.