சினிமா செய்திகள்

புகழ் பெற்ற இயக்குனர் மகள் ஆபாச பட நடிகையானார் + "||" + Daughter of famed director She became a porn star

புகழ் பெற்ற இயக்குனர் மகள் ஆபாச பட நடிகையானார்

புகழ் பெற்ற இயக்குனர் மகள்  ஆபாச பட நடிகையானார்
உலக புகழ் பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் மகள் மைக்கேலா ஆபாச படங்களை தயாரித்து அவற்றில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளில் ஆபாச படங்கள் தயாரிப்பதையும், அவற்றில் நடிப்பதையும் தொழிலாகவே செய்கிறார்கள். ஜூராசிக் பார்க் உள்ளிட்ட முக்கிய ஹாலிவுட் படங்களை இயக்கி உலக புகழ் பெற்ற இயக்குனராக உயர்ந்த ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் மகள் மைக்கேலாவும் இந்த தொழிலுக்கு வருகிறார். ஆபாச படங்களை தயாரித்து அவற்றில் நடிக்க போவதாக அவர் அறிவித்துள்ளார். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மைக்கேலா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனக்கு பாலியல் தொடர்பான விஷயங்களில் எப்போதுமே விருப்பம் உண்டு. எனவேதான் ஆபாச படங்களில் நடிக்க தற்போது முடிவு செய்து இருக்கிறேன். உடலை வைத்து பணம் சம்பாதிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கருதுகிறேன். அதனால்தான் இந்த தொழிலுக்கு வருகிறேன்.

ஆபாச படங்களில் நடிக்கும் எனது விருப்பத்தை தந்தை ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் மற்றும் தாயிடம் சொன்னேன். அவர்கள் நான் எடுத்த முடிவுக்காக கவலைப்படவில்லை. மாறாக எனக்கு இருவரும் வாழ்த்து கூறினார்கள். ஆபாச படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் அந்த படங்களை நானே தயாரிக்க இருக்கிறேன்.”

இவ்வாறு மைக்கேலா கூறினார்.

23 வயதான மைக்கேலா ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கின் வளர்ப்பு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தவிர மேலும் 5 பேரை அவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.