சினிமா செய்திகள்

திரிஷா படத்தில் சர்ச்சை காட்சிகள் + "||" + In the movie Trisha Scenes of controversy

திரிஷா படத்தில் சர்ச்சை காட்சிகள்

திரிஷா படத்தில் சர்ச்சை காட்சிகள்
திரிஷா சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
அடுத்து திரைக்கு வரும் பரமபதம் விளையாட்டு படமும் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என்கின்றனர். இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பரம பதம் விளையாட்டு படத்தின் டிரெய்லர்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திரிஷா சிகிச்சை அளிக்கிறார். முதல்- அமைச்சர் கவலைக்கிடம் என்பதை மறைக்கும்படி மந்திரியாக வரும் ஏ.எல்.அழகப்பன் வற்புறுத்துகிறார்.


முதல்-அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டு தளத்தில் இருக்கும் மற்ற நோயாளிகளை அப்புறப்படுத்தும்படியும், கண்காணிப்பு கேமராக்களை அகற்றும்படியும் வற்புறுத்துகிறார். முதல்வர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற மருத்துவ அறிக்கைக்கு பதிலாக இட்லி சாப்பிட்டார், ஜூஸ் குடித்தார் என்ற அறிக்கையை படிக்கும்படி வற்புறுத்தப்படுகிறது.

இதற்கு திரிஷா மறுப்பதால் அவருக்கு சிக்கல்கள் வருவதுபோன்ற திரைக்கதையில் படத்தை எடுத்துள்ளனர். இந்த காட்சிகளுக்கு தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்காமல் பாராட்டி யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் டிரெய்லரை பார்த்த பாக்யராஜ் கூறும்போது, “மருத்துவமனை, ‘சிசிடிவி’ கேமரா, இட்லி சாப்பிட்டார் போன்ற காட்சிகள் தணிக்கை குழுவை தாண்டி எப்படி வந்தது என்று தெரியவில்லை” என்று கூறினார். இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.