சினிமா செய்திகள்

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் + "||" + Vijay in the Lokesh Kanagaraj Direction again

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்
மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். ஓரிரு வாரத்தில் முழு படப்பிடிப்பையும் முடிக்க உள்ளனர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், விஜய் சேதுபதி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்கும் தாதாவாகவும் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 65-வது படத்தின் இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மகிழ் திருமேனி, வெற்றி மாறன், பாண்டிராஜ், சுதா கொங்கரா ஆகியோரிடம் விஜய் கதை கேட்டு இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் பல வெற்றி படங்களை இயக்கி உள்ளனர். ஆனாலும் விஜய் படங்களை இதுவரை இயக்கவில்லை.

இந்த நிலையில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ் சொன்ன இன்னொரு கதையும் விஜய்க்கு பிடித்துள்ளதாகவும், அடுத்து அந்த படத்தில் நடிக்க அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.