சினிமா செய்திகள்

டிரம்ப் விருந்து: ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு நன்றி - ஏ.ஆர்.ரகுமான் + "||" + One of our heroes at the Rashtrapati Bhavan A.R.Rahman

டிரம்ப் விருந்து: ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு நன்றி - ஏ.ஆர்.ரகுமான்

டிரம்ப் விருந்து:  ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு நன்றி - ஏ.ஆர்.ரகுமான்
டிரம்ப் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுத்த ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு மிக்க நன்றி என ஏ.ஆர். ரகுமான் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார்.  இந்த பயணத்தின் போது  இந்தியா, அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம், டிரம்ப், மோடி முன்னிலையில் கையெழுத்தானது. 

இந்தநிலையில் இந்தியா வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் குடும்பத்தினருக்கு நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சில முதல்-மந்திரிகளும், தொழிலதிபர்களும் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.  அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டிரம்பிற்கு ஏ.ஆர். ரகுமானை அறிமுகம் செய்து வைத்தார். 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட புகைப்படங்களை ஏ.ஆர். ரகுமான் இன்ஸ்டாகிராம், டுவிட்டரில்   பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் டுவிட்டர் பதிவில்,

ராஷ்டிரபதி பவனில் எங்கள் ஹீரோக்களில் ஒருவர் (அப்துல் கலாம்) இந்த ஒரு சிறப்பு சந்தர்ப்பத்திற்காக ஜனாதிபதியின் அன்பான அழைப்பிற்கு மிக்க நன்றி'' என ஏ.ஆர். ரகுமான்  பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த படம் ஓ.டி.டி.யில் ரிலீசாகும் முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பு
தியேட்டரில் வெளியாகும் படங்களை முதல் நாளே திருட்டுத்தனமாக படம் பிடித்து இணையதளங்களில் வெளியிடும் வழக்கம் இருந்து வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் பல கட்ட முயற்சி எடுத்தும் தடுக்க முடியவில்லை. தற்போது கொரோனா ஊரடங்கில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும், உடனுக்குடன் திருட்டு இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
2. சினிமாவில் நடிக்க முடிவா? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்' என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.
3. கதை எழுதி படம் தயாரிப்பது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்
இந்திய பட உலகில் முன்னனி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார். தற்போது 99 ஸாங்க்ஸ் என்ற படத்துக்கு கதை எழுதி தயாரித்து இருக்கிறார்.