சினிமா செய்திகள்

திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் - படக்குழுவினர் தகவல் + "||" + The master film will be released as planned

திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் - படக்குழுவினர் தகவல்

திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் - படக்குழுவினர் தகவல்
திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார் . இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். 

விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்றும், நீட் தேர்வு பாதிப்புகளை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.  இந்தநிலையில்  மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் 'ஒரு குட்டி கத' காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 

இதற்கிடையே மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. 

இந்நிலையில் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு 95% நிறைவடைந்து விட்டதாகவும், டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று படகுழுவினர் தெரிவித்தாக கூறப்படுகிறது.