மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்தது விஜய்யை முத்தமிட்ட விஜய் சேதுபதி


மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்தது விஜய்யை முத்தமிட்ட விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 2 March 2020 6:33 AM IST (Updated: 2 March 2020 6:33 AM IST)
t-max-icont-min-icon

விஜய் நடிக்கும் "மாஸ்டர்" கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். இதன் படப்பிடிப்பு டெல்லி, சிவமொக்கா, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது.

சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். அப்போது வருமான வரித்துறையினர் விஜய்யை காரில் சென்னைக்கு அழைத்து வந்து வீட்டில் சோதனை நடத்தியது பரபரப்பானது. சோதனைகள் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். தொடர்ந்து விடுபட்ட சில காட்சிகளை சென்னையில் படமாக்கினர்.

முழு படப்பிடிப்பும் தற்போது முடிந்துள்ளது. படப்பிடிப்பின் கடைசி நாளில் விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். அப்போது படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த புகைப்படம் இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மக்கள் செல்வன் என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய குட்டி கதை பாடலை வெளியிட்டனர். அடுத்தடுத்து விஜய்யின் தோற்றங்களும் வெளியானது. விஜய், விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக மோதும் தோற்றத்தையும் வெளியிட்டனர். இதன் மூலம் மாஸ்டர் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Next Story