தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடத்தில் 5 மொழிகளில் தயாராகும் `அஹம் பிரம்மாஸ்மி'
நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, `அஹம் பிரம்மாஸ்மி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது.
மஞ்சு மனோஜ் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, தனிகல பரணி, பெசன்ட் ரவி ஆகிய 3 பேர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், ஸ்ரீகாந்த் ரெட்டி. மஞ்சு மனோஜ், நிர்மலா தேவி ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
படத்தின் முதல் தோற்றத்தில் மஞ்சு மனோஜ் விபூதி அணிந்து, வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டார்.
Related Tags :
Next Story