சினிமா செய்திகள்

ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல் நடிகை நமீதா புகார் + "||" + Actress Namitha complains

ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல் நடிகை நமீதா புகார்

ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டல்  நடிகை நமீதா புகார்
தன்னை மிரட்டிய நபரின் புகைப்படத்தை நமீதா தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்யின் அழகிய தமிழ்மகன், அஜித்குமாரின் பில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நமீதா. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். நடிகர் விரேந்திர சவுத்ரியை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நமீதாவை ஆபாச படங்களில் பார்த்ததாகவும், அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடப்போவதாகவும் ஒருவர் மிரட்டி உள்ளார்.

மிரட்டிய நபரின் புகைப்படத்தை நமீதா தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அதில் நமீதா கூறியிருப்பதாவது:-

“புகைப்படத்தில் இருக்கும் நபர், இன்ஸ்டாகிராமில் என்னை ஆபாசமாக அழைத்தார். எனது வலைத்தள கணக்கை ‘ஹேக்’ செய்துவிட்டதாக கூறினார். எனது ஆபாச படத்தை பார்த்ததாகவும், அதை இணைய தளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறினார். நான், அதை செய் என்றேன். இதுபோன்ற நபர்கள், பெண்ணை எப்படி வேண்டுமானாலும் கேவலமாக அழைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

நான் அமைதியாக இருப்பதை பலவீனமாக எண்ண வேண்டாம். உண்மையான மனிதனுக்கு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரியும். பெற்ற தாயை அவமதித்தால் இந்த நபர் ஏற்றுக்கொள்வாரா, துர்கா பண்டிகை, மகளிர் தினம் போன்றவற்றை கொண்டாடுவதற்கு பதிலாக பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.”

இவ்வாறு நமீதா கூறியுள்ளார். வலைத்தளத்தில் பலரும் நமீதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.