எனது ஆடையை விமர்சித்த கோழைகள் ரகுல் பிரீத் சிங் சாடல்


எனது ஆடையை விமர்சித்த கோழைகள்   ரகுல் பிரீத் சிங் சாடல்
x
தினத்தந்தி 18 March 2020 10:30 PM GMT (Updated: 2020-03-18T22:57:15+05:30)

தான் அணிந்த உடை குறித்து எல்லை மீறி ஆபாசமாக விமர்சித்தவரை நடிகை ரகுல் பிரீத் சிங் சாடயுள்ளார்.

தமிழில், தடையற தாக்க படத்தில் அறிமுகமாகி புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனால் சிலர் ஆபாசமாக திட்டி கருத்து பதிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுத்து ரகுல் பிரீத் சிங் கூறியிருப்பதாவது:-

“நடிகைகளை சிலர் கேவலமாக பார்க்கிறார்கள். சினிமாவில் நடிப்பவர்கள்தானே இவர்களால் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். அதனால் சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் கருத்துகளை பதிவிடுகிறார்கள்.

இவை மனதளவில் என்னை மிகவும் பாதித்து உள்ளன. பெண்களை போதை பொருளாக இந்த சமூகம் பார்க்கிறது. அந்த நிலைமை மாற வேண்டும். சமூக வலைத்தளத்தில் ஒருவர், நான் அணிந்த உடை குறித்து எல்லை மீறி ஆபாசமாக பேசினார். எனக்கு கோபம் வந்தது. அவரை திட்டினேன்.

போலி கணக்குகள் பின்னால் ஒளிந்து உண்மையான முகத்தை வெளிகாட்ட துணிச்சல் இல்லாத கோழைகள்தான் நடிகைகளின் வலைத்தள பக்கத்தில் இதுபோன்ற ஆபாச கருத்துகளை பதிவிடுகிறார்கள். இவர்களுக்கு சமூக வலைத்தள பக்கத்தில் கணக்குகள் தொடங்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். அப்படி என்றால்தான் இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க முடியும்”.

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.

Next Story