தன்னைத்தானே தனிமைப்படுத்திய அமிதாப்பச்சன்-மம்தா


தன்னைத்தானே தனிமைப்படுத்திய அமிதாப்பச்சன்-மம்தா
x
தினத்தந்தி 20 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-21T00:25:49+05:30)

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் நடிகர்-நடிகைகள் சுற்றுப்பயணங்களை ரத்துசெய்து வீட்டில் முடங்கி உள்ளனர். இந்தி நடிகர்-நடிகைகள் பலர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மும்பை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மும்பையில் உள்ள வீட்டில் ரசிகர்களை அமிதாப்பச்சன் சந்திப்பது வழக்கம். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரசிகர்கள் சந்திப்பை ரத்து செய்து விட்டார்.

இதுபோல் தமிழில் விஷாலின் சிவப்பதிகாரம், ரஜினியின் குசேலன், மாதவனின் குரு நம்ம ஆளு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள மம்தா மோகன்தாஸ் இசை ஆல்பம் ஒன்றில் நடிப்பதற்காக சமீபத்தில் துபாய் சென்று இருந்தார். தற்போது கேரளா திரும்பி உள்ள அவர் கொரோனா அச்சுறுத்தலால் கொச்சியில் உள்ள வீட்டில் தன்னை தனிமைபடுத்தி கொண்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து முகத்துக்கு மாஸ்க் அணிந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Next Story