கொரோனா ஓய்வில் உடல் எடையை குறைக்கிறேன் - நடிகை கங்கனா ரணாவத்


கொரோனா ஓய்வில் உடல் எடையை குறைக்கிறேன் - நடிகை கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 25 March 2020 1:01 AM GMT (Updated: 2020-03-25T06:31:58+05:30)

கொரோனா ஓய்வில் உடல் எடையை குறைத்து வருவதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.


கொரோனாவால் வந்த ஓய்வை நடிகர்-நடிகைகள் பலரும் பலவிதமாக உபயோகப்படுத்துகிறார்கள். கங்கனா ரணாவத் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு இருக்கிறார். ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படப்பிடிப்பில் சில மாதங்களாக கங்கனா ரணாவத் பங்கேற்று நடித்து வந்தார். இதில் ஜெயலலிதா தோற்றத்துக்கு மாறுவதற்காக இயக்குனர் சொன்னதாலும் கதாபாத்திரம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் 20 கிலோ உடல் எடையை கூட்டி இருந்தார்.

தற்போது அவரது காட்சிகள் முடிந்து விட்டதால் இனி நடிக்கப்போகும் புதிய படத்துக்கு உடல் எடையை குறைத்து பழைய ஒல்லியான தோற்றத்துக்கு மாறச்சொல்லி இருக்கிறார்கள். இதனால் கொரோனாவுக்காக கிடைத்த ஓய்வை பயிற்சியாளர் வைத்து உடல் எடையை குறைக்க பயன்படுத்தி வருகிறேன் என்றார்.


Next Story