சினிமா செய்திகள்

நடிகை சுருதிஹாசன் பகிர்ந்த மீம்ஸ் + "||" + Memes shared by actress Surathi Haasan

நடிகை சுருதிஹாசன் பகிர்ந்த மீம்ஸ்

நடிகை சுருதிஹாசன் பகிர்ந்த மீம்ஸ்
நடிகை சுருதிஹாசன் மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். நடிகை சுருதிஹாசனும், தனது இன்ஸ்டாகிராமில், வீட்டில் தனித்து இருங்கள். நான் என்னைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள் என்று கூறியுள்ளார். இதை பலரும் வரவேற்றனர்

ஆனால் சில ரசிகர்கள் ‘‘தயவு செய்து உதவி பண்ணுங்க. 7-ம் அறிவு போதி தர்மரை அழைத்து வந்து கொரோனா பாதிப்பில் இருந்து குணப்படுத்துங்கள்’’ என்று குறிப்பிட்டு இருந்தனர். ஒருவர் சுருதிஹாசன், வடிவேலு புகைப்படங்களை இணைத்து இன்னும் 7 நாளில் போதி தர்மரை கொண்டு வரவேண்டும் என்று சுருதிஹாசனுக்கு கட்டளையிடுவதுபோல் தமாசாக மீம்ஸ் வெளியிட்டு இருந்தார். இந்த மீம்சை சுருதிஹாசன் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூர்யா, சுருதிஹாசன் ஜோடியாக நடித்த ‘7-ம் அறிவு’ படத்தில் தொற்று நோயை குணப்படுத்தும் போதி தர்மர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.