மட்சா காபிக்கு மாறிய நடிகை சுருதிஹாசன்


மட்சா காபிக்கு மாறிய நடிகை சுருதிஹாசன்
x
தினத்தந்தி 18 April 2020 9:53 AM GMT (Updated: 2020-04-18T16:38:15+05:30)

15 ஆண்டுகளுக்குப் பிறகு தான் மட்சா காபிக்கு மாறியதாக நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவின் உகான் நகரில்  முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,259,681 ஆக உள்ளது.  நோய் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 416 பேர் பலியாகி உள்ளனர். அதேவேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 78 ஆயிரத்து 359  ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழித்து வருகிறார்கள்.

அதேபோல்  நடிகை சுருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் செய்யும் சுவாரஸ்யமான செயல்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தனது பின்தொடர்பாளர்களுடன் பகிர்ந்துவருகிறார். உடற்பயிற்சி செய்வது, பாடுவது, சமைப்பது என பதிவிட்டு வந்த அவர், பதிவிட்ட புகைப்படத்தில் மிகவும் விசித்திரமாக போஸ் கொடுத்துள்ளார். அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பானத்தை குடித்தபின் ஒரு சங்கடமாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா போஸ்ட்டில்,

"நான் 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக சிறிய அளவு மட்சா காபியை குடிக்கத் தொடங்கினேன். எனக்கு மிகவும் விசித்திரமாக இருக்கிறது. நன்றாக தான் இருந்தது ஆனால் சொர்க்கத்தில் தயாரிக்கப்பட்ட என் மாட்சாவுக்குத் திரும்புகிறேன் என அதில் கூறியுள்ளார்.

மட்சா காபி ஆனது காமிலியா சைன்சஸ் என்று தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதை அப்படியே க்ரீன் டீ வடிவில் ஜப்பான் மற்றும் சீனா மக்கள் 500 வருடத்திற்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தாவரத்தின் இலைகளை நல்ல பொடியாக்கி தேயிலையாக பயன்படுத்துவதால் மற்ற தேநீரை காட்டிலும் இதன் சுவையும் நறுமணமும் நல்ல ஸ்ட்ராங் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆரோக்கியமான தேநீர் அருந்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த மட்சா டீ சிறந்ததாக இருக்கும் என பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.

Next Story