சினிமா செய்திகள்

கொரோனா ஊரடங்கில் நடந்த இளம் நடிகர் திருமணத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு + "||" + Popular actress protests against young actor's marriage

கொரோனா ஊரடங்கில் நடந்த இளம் நடிகர் திருமணத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு

கொரோனா ஊரடங்கில் நடந்த இளம் நடிகர் திருமணத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு
இளம் நடிகர் திருமணத்துக்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரித்துள்ளார்.
சென்னை,

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில், ஜாக்குவார் உள்பட சில கன்னட படங்களில் நடித்து இளம் நடிகராக வலம் வருகிறார். நிகிலுக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் கொரோனா ஊரடங்குக்கு இடையிலும் திருமணம் நடந்தது.

சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இந்த திருமணம் நடந்ததாகவும், திருமண நிகழ்ச்சியில் முக கவசம் அணியாமல் 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் திருமணத்தை நடத்தியதற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

பிரபல இந்தி நடிகை ரவீணா தாண்டன் டுவிட்டர் பக்கத்தில், “நாட்டில் ஏராளமானோர் தங்கள் குடும்பங்களோடு சேர முடியாமல் பசி, பட்டினியில் உள்ளனர். அவர்களுக்கு சிலர் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுவெல்லாம் தெரியாததுபோல் சில ஜீவன்கள் இருக்கின்றன. அந்த திருமண நிகழ்ச்சியில் என்ன பரிமாறினார்கள்? என்று நான் யோசிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகரான பரேஸ் ராவல் கூறும்போது, “ஊரடங்கை மீறி திருமணத்தை நடத்திய இவர்களை கர்நாடக போலீசார் கைது செய்ய வேண்டும். மணமக்கள் தங்கள் வாழ்க்கையின் சில நாட்களை சிறையில் கழிக்கட்டும்” என்று கூறியுள்ளார். இதுபோல் மேலும் பலர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.