சினிமா செய்திகள்

பொன்னான நேரத்தை பயன்படுத்தி ஆன்லைனில் சினிமா தொடர்பான படிப்பை கற்கும் ஜெயம் ரவி பட ஹீரோயின் + "||" + nidhi agarwal busy with online course in quarantine

பொன்னான நேரத்தை பயன்படுத்தி ஆன்லைனில் சினிமா தொடர்பான படிப்பை கற்கும் ஜெயம் ரவி பட ஹீரோயின்

பொன்னான நேரத்தை பயன்படுத்தி ஆன்லைனில் சினிமா தொடர்பான படிப்பை கற்கும் ஜெயம் ரவி பட ஹீரோயின்
பொன்னான நேரத்தை பயன்படுத்தி திறமையை வளர்க்க ஜெயம் ரவி பட ஹீரோயின் ஆன்லைனில் சினிமா தொடர்பான படிப்பை கற்று வருகிறார்.
மும்பை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நிதி அகர்வால். நடிகை நிதி அகர்வால் திரைப் பட நடிகை 

மட்டும் இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் இந்தியில் முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் தான் 

சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் சவ்யாசாச்சி மிஸ்டர் மஞ்சு ஆகிய  படங்களில் நடித்து உள்ளார்.

ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மணன், அடுத்து இயக்கும் படம், 'பூமி'. இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இது அவருக்கு 25-வது படம் ஆகும். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். 

இந்நிலையில் நடிகை நிதி அகர்வால், இந்த நேரத்தை தனது திறமையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்த முடிவு செய்துள்ளார். அதன்படி நியூயார்க் பிலிம் அகாடமியில் ஆன் லைன் கோர்ஸில் இணைந்துள்ளார்.

நடிப்பு மற்றும் இயக்கம் தொடர்பான படிப்பில் அவர் இணைந்து உள்ளார். இங்கு ஏற்கனவே இரண்டு கோர்ஸ்களை முடித்துள்ள அவர், இப்போது மூன்றாவது அமர்வில் இணைந்துள்ளார். இதன் மூலம் ஸ்கிரிப்ட் ரைட்டிங் மற்றும் இயக்கம் தொடர்பான படிப்பை அவர் கற்று வருகிறார். இந்த அகாடமியில் பல டோலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே பயின்றது  குறிப்பிடத்தக்கது.