கொரோனா பரவலை தடுக்க இரவு பகலாக உழைக்கும் போலீசார், மருத்துவர்களுக்கு வைரமுத்துவின் நன்றி பாடல்


கொரோனா பரவலை தடுக்க இரவு பகலாக உழைக்கும் போலீசார், மருத்துவர்களுக்கு வைரமுத்துவின் நன்றி பாடல்
x
தினத்தந்தி 21 April 2020 4:49 AM GMT (Updated: 21 April 2020 4:49 AM GMT)

கொரோனா பரவலை தடுக்க இரவு பகலாக உழைக்கும் போலீசார், மருத்துவர்களுக்கு வைரமுத்துவின் நன்றி தெரிவித்த பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்கவும், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளை காப்பாற்றவும் இரவு பகலாக உழைக்கும் போலீசார், மருத்துவர்கள், சுகாதார, தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வைரமுத்து எழுதிய பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி உள்ளார். இந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. பாடல் வரிகள் வருமாறு:-

உழைக்கும் கடவுள்களே உங்களுக்கெல்லாம் நன்றி. அழைக்கும் வேளையிலே எங்கள் ஆருயிர் காப்பீரே. உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி. இதயத்தில் இருந்து சொற்கள் எடுத்து, எடுத்த சொற்களை தேனில் நனைத்து வாரி வழங்குகின்றோம். உம்மை வணங்கி மகிழுகின்றோம். மண்ணுயிர் காக்க தன்னுயிர் மறக்கும் மானுட கடவுள் மருத்துவர்கள், தேவை அறிந்து சேவை புரியும் தேவதைமார்கள் செவிலியர்கள். பயிரை காக்கும் வேர்கள் போல உயிரை காக்கும் ஊழியர்கள், வெயிலை தாங்கும் விருட்சம்போல வீதியில் நிற்கும் காவலர்கள், தூய்மை பணியில் வேர்வை வழியத் தொண்டு நடத்தும் ஏவலர்கள். வணக்கமய்யா வணக்கம், எங்கள் வாழ்க்கை உங்களால் நடக்கும். உங்கள் தேசத்தொண்டை வாழ்த்திக்கொண்டே தேசிய கொடியும் பறக்கும்.

இவ்வாறு வரிகள் உள்ளன. இந்த பாடல் வீடியோவில் போலீசார் கையெடுத்து கும்பிட்டு மோட்டார் சைக்கிளில் வருபவர்களிடம் வீட்டில் இருக்க கெஞ்சுவது. வெளியில் சுற்றுவோரை கொரோனா தொப்பி அணிந்து பயமுறுத்துவது. நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது, சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Next Story