சினிமா செய்திகள்

மனிதம் வளரணும்...மருத்துவர்களே கடவுள் - நடிகர் சசிகுமார் + "||" + human Thrower The doctors are God The actor Sasikumar

மனிதம் வளரணும்...மருத்துவர்களே கடவுள் - நடிகர் சசிகுமார்

மனிதம் வளரணும்...மருத்துவர்களே கடவுள் - நடிகர் சசிகுமார்
மனிதம் வளரணும்...மருத்துவர்களே கடவுள் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் டாக்டரின் உடலை எடுத்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதோடு, டிரைவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில்,

கடந்த ஒன்றரை மாத காலமாக கொரோனா வைரஸ் என்கிற கொடிய நோய்க்கு எதிராக போராடும் மருத்துவர்கள், நம்மை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு அவர்கள் வெளியில் இறங்கி போராடி வருகிறார்கள்.. ஆனால் இப்ப கேள்விப்படுற சம்பவங்கள் ரொம்ப வருத்தபட வைக்கிறது, நம் உயிரை காப்பாற்றியவர்களையும் சரி, காப்பாற்றிகொண்டு இருப்பவர்களையும் சரி நாம தான் மதிக்கணும். 

இந்தமாதிரி சம்பவங்கள் இனி நடக்க கூடாது.. நடக்கவே நாம் விடக்கூடாது. இதுவே நமது கடமை ஆகும். இது நம்மை பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் இவர்களை நாம் தான் 
பாதுகாக்கணும்.. அவங்களுக்கு ஆதரவா இருக்கணும்.. அது தான் மனிதம்.. மனிதம் வளரணும்.

இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.