சினிமா செய்திகள்

சமூக வலைதளத்தில் மீண்டும் களமிறங்கிய நடிகை சமந்தா! + "||" + Samantha Akkineni is back on social media after a small break, shares photo with her pup Hash

சமூக வலைதளத்தில் மீண்டும் களமிறங்கிய நடிகை சமந்தா!

சமூக வலைதளத்தில் மீண்டும் களமிறங்கிய நடிகை சமந்தா!
நடிகை சமந்தா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சென்னை,

தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். 2010–ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. 

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார். 

2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.  

இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன். ஏ மாய சேசாயே தெலுங்கு படத்தில் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

அந்தப் படம் 'ஜானு' என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை போலவே தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்து அசத்தினார்.  ஜானு திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்தநிலையில்  நடிகை சமந்தா கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சோஷியல் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில், தனது செல்ல நாய்க்குட்டி ஹாஷ் உடன் படுத்திருக்கும் புகைப்படத்தை நடிகை சமந்தா இன்று வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். 

மேலும், அதற்கு கேப்ஷனாக நீண்ட தூக்கத்தில் இருந்து மீள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இத்தனை காலம் சமூக வலைதளத்தில் தலையை காட்டாமல் இருந்ததற்கு விடை அளிக்கும் விதமாக இதனை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது - நடிகை சமந்தா
கொரோனாவால் எனது எண்ணம், தோரணை எல்லாம் மாறிவிட்டது என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
2. பிரபல ஹாலிவுட் நடிகையிடம் நடிப்பு கற்கும் நடிகை சமந்தா
ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரெனிடம் இருந்து நடிப்பு கற்கிறேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
3. நான் எதற்காக கடவுளை வேண்டுகிறேன்: பிறந்த நாளில் நடிகை சமந்தா அளித்த பதில்
நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.