10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நடிகை தமன்னா உதவி


10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நடிகை தமன்னா உதவி
x
தினத்தந்தி 23 April 2020 5:22 AM GMT (Updated: 23 April 2020 5:22 AM GMT)

10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நடிகை தமன்னா வழங்கி உள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. ஏற்கனவே 21 நாட்கள் இருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள தினக்கூலி தொழிலாளர்களும், வெளிமாநில தொழிலாளர்களும் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் உணவு கிடைக்காமலும் திண்டாடுகிறார்கள். அதில் சிலருக்கு நடிகை தமன்னா உதவி உள்ளார். மும்பை குடிசை பகுதிகளில் வாழும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.

இதுகுறித்து தமன்னா கூறும்போது, “ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கான நல்ல நடவடிக்கை. இயல்புநிலை திரும்ப சில மாதங்கள் ஆகலாம். இதனால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. தினமும் வேலை செய்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். யாரும் பசியோடு தூங்க கூடாது என்று முடிவு எடுத்து அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் தாராளமாக நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ஏற்கனவே தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ தமன்னா ரூ.3 லட்சம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story