சமூக வலைதளங்களில் இருந்து நடிகர் சூரி எங்கே போனார்? ரசிகர்கள் வருத்தம்


சமூக வலைதளங்களில் இருந்து நடிகர் சூரி எங்கே போனார்?  ரசிகர்கள் வருத்தம்
x
தினத்தந்தி 25 April 2020 6:12 AM GMT (Updated: 2020-04-25T11:42:49+05:30)

சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருந்த நடிகர் சூரி எங்கே போனார் என ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

சென்னை,

கொரோனா  பரவலை தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள். அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில், காமெடி நடிகர் சூரி, கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாட்களில் தினமும் தனது வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் சேர்ந்து  சுவாரஸ்யமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். அவரது கலகலப்பான அந்த வீடியோக்களுக்கு சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சினிமாவை போலவே நிஜத்திலும் சூரியின் இந்த காமெடி வீடியோக்களுக்கு என தனியே ரசிகர் வட்டம் உருவானது.

அவர் கடைசியாக ஏப்ரல் 17-ம் தேதி வெளியிட்ட வீடியோவில், அரசு சொல்லை மீறி வெளியே சுற்றியதால் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக காட்சிப்படுத்தி ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் அதன்பின் சூரியை சமூகவலைதளப்பக்கமே காணவில்லை என ரசிர்கள் வருத்ததுடன் உள்ளனர்.

சமீபத்தில் சசிகுமார், சிவகார்த்திகேயன் கூறிய விழிப்புணர்வு வீடியோக்களை மட்டும் ரீ-டுவீட் செய்து இருந்தார். 

சூரியின் வீடியோக்கள்  சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு நல்ல பொழுது போக்காக இருந்தது. அவர் ஏன் வீடியோ போடுவதை நிறுத்திவிட்டார் என ரசிகர்கள் மத்தியில் புரியாத புதிராக உள்ளது.

Next Story