சினிமா செய்திகள்

ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களை நேரலையில் பாடிய ஜி.வி.பிரகாஷ் + "||" + Coming live at 8 tonight on my YouTube channel g.v.praksh

ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களை நேரலையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்

ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களை நேரலையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களை யூடியூப் நேரலையில் பாடி அசத்தினார்.
சென்னை,

இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ‘டிராப் சிட்டி’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.

இந்தநிலையில், ரசிகர்கள் விரும்பி கேட்ட பாடல்களை யூடியூப் நேரலையை ஆரம்பிக்கும் முன் டுவிட்டரில் பதிவு செய்த ஜி.வி.பிரகாஷ் தான் அசுரன் படத்தில் இருந்து எள்ளு வாய பூக்களையே பாடலின் மூலம் பாடல் செஸ்ஸன் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும் இந்த நேரலையில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்பதிற்கேற்ற பாடலை கேளுங்கள் என கூறியிருந்தார்.

ரசிகர்களும் ஜி.வி.பிரகாஷ் கேட்டு கொண்டதற்கு இணங்க தங்களின் விருப்பமான பாடல்களை பாடுமாறு நேரலையில் கேட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த நேரலையில் ரசிகர்கள் கேட்ட அனைத்து பாடல்களையும் தனது வீட்டில் இருந்த படியே டிஜிட்டல் இசை கருவிகளின் உதவியோடு பாடி அசத்தினார்.

இந்த பாடல் செஸ்ஸனுக்கு பின்பு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை ரசிகர்கள் வாழ்த்தி நன்றி தெரிவித்தனர். 

தாங்கள் விரும்பி கேட்ட பாடல்களை பொறுமையாக பாடியதற்கு நன்றி தெரிவித்தும், ஜி.வி.பிரகாஷின் இசையில் வரவிருக்கும் சூரரைப்போற்று படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்தும் தெரிவித்தனர்.