கொரோனா நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் - அஜித் கேட்டுக்கொண்டதாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் டுவீட்


கொரோனா நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் - அஜித் கேட்டுக்கொண்டதாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் டுவீட்
x
தினத்தந்தி 26 April 2020 8:46 AM GMT (Updated: 2020-04-26T14:16:26+05:30)

கொரோனா நேரத்தில் கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாம் என்று அஜித் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டதாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் டுவீட் செய்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ரசிகர்கள் இவரை செல்லமாக ‘தல’ என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். வரும் மே 1-ம் தேதி அஜித் தனது 49-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். 

மே 1ஆம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பொதுவான டிபி பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கொண்டாடலாம் என திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சமூகவலைதளத்தில் அனைவரும் பயன்படுத்துவதற்காக பிறந்தநாள் காமென் டிபி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டிபியை, அருண் விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ்.தமன், ராகுல் தேவ் , பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி உள்ளிட்ட 14 பிரபலங்கள் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளனர். இதில் தீவிர விஜய் ரசிகரான சாந்தனுவும் இடம் பிடித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கிறார்.  இந்நிலையில் வரும் மே 1 அஜித்தின் பிறந்தநாள் வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் ஆதவ் கண்ணதாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அஜித்தின் அலுவலகத்தில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அவரது பிறந்தநாளில் ரசிகர்கள் யாரும் ஒரே புகைப்படத்தை டிபியாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும், கொரோனா சமையத்தில் அதை கொண்டாட வேண்டாம் என்றும் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

Next Story