சினிமா செய்திகள்

கொரோனா: மே மாதம் முடிவில் விடிவு கிடைக்கலாம்; நமக்கும் வாய்ப்பு இருக்கு - நடிகர் விவேக் + "||" + At the end of May Dawn may be available Vivekh actor

கொரோனா: மே மாதம் முடிவில் விடிவு கிடைக்கலாம்; நமக்கும் வாய்ப்பு இருக்கு - நடிகர் விவேக்

கொரோனா: மே மாதம் முடிவில் விடிவு கிடைக்கலாம்; நமக்கும் வாய்ப்பு இருக்கு - நடிகர் விவேக்
மே மாதம் முடிவில் விடிவு கிடைக்கலாம், நமக்கும் வாய்ப்பு இருக்கு என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சென்னை,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் கட்டுக்குள் வந்த பாடில்லை.  இந்தியாவில் கொரோனா 
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது.பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது. 

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வுக்காக புதிய வீடியோ ஒன்றை நடிகர் விவேக் டுவிட்டரில்வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது ;

மக்களே அன்புள்ள இளைஞர்களே..தமிழகத்தை சார்ந்த அனைத்து நண்பர்கள். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இப்ப முழுமையான ஊரடங்கு அறிவிச்சிருக்காங்க. இந்த தொற்று குறைஞ்சு, ஸீரோ கேசஸ்னு வரணும். அப்பதான் நாமளும் அதுல இருந்து வெளிய வர உதவும். 

அது நம்ம கையிலதான் இருக்கு. நாம இனி மேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் செய்யணும். சிங்கப்பூர்ல இருந்த வந்த லேட்டஸ்ட் ஆய்வின்படி, மே மாத இறுதியில இதுக்கு ஒரு விடிவு கிடைக்கலாம்னு சொல்றாங்க, உலகத்துக்கே. நமக்கும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு, நாம் தமிழக அரசுடனும் இந்திய அரசுடனும் ஒத்துழைத்தால் நன்றி.

இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம்
நடிகர் விவேக் மரணத்தை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2. நடிகர் விவேக் தனது திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் - உள்துறை அமைச்சர் அமித்ஷா
மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
3. விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை- சென்னை மாநகராட்சி கமிஷனர்
விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறி உள்ளார்.
4. நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக அரசு
நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
5. நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால், தனுஷ் ஆகியோர் இரங்கல்
நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் மோகன்லால் மற்றும் தனுஷ் ஆகியோர் டுவிட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.