சினிமா செய்திகள்

திருமண நிதியை நிவாரணத்துக்கு வழங்கிய ரஜினி பட நடிகர் + "||" + Rajini film actor who gave the marriage fund relief

திருமண நிதியை நிவாரணத்துக்கு வழங்கிய ரஜினி பட நடிகர்

திருமண நிதியை நிவாரணத்துக்கு வழங்கிய ரஜினி பட நடிகர்
ரஜினி பட நடிகர் மணிகண்டன் தனது திருமண நிதியை நிவாரணத்துக்கு வழங்கினார்.
சென்னை,

ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்திலும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் ‘கம்மாட்டி பாடம்’ படம் மூலம் அறிமுகமானார். மம்முட்டியின் மாமாங்கம், சிப்பி உள்ளிட்ட மேலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

மணிகண்டனுக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் திருமணம் நடத்துவது என்றும் முடிவானது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பலர் தங்கள் திருமணங்களை தள்ளி வைத்துள்ளனர். எனவே மணிகண்டன் திருமணம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் மணிகண்டன் ஆடம்பரமாக நடத்த இருந்த தனது திருமண ஏற்பாடுகளை ரத்து செய்து விட்டு கேரள மாநிலம் எரூரில் உள்ள அய்யம்பில்லிக்காவு பகவதி அம்மன் கோவிலில் திருமணத்தை எளிமையாக நடத்தினார். இதில் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தங்கள் திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தை கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார்.