சினிமா செய்திகள்

ஜோதிகாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு + "||" + Lakshmi Ramakrishnan's support for Jodhika

ஜோதிகாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு

ஜோதிகாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு
கோவில்கள் விவகாரம் தொடர்பாக பேசிய நடிகை ஜோதிகாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

ஜோதிகாவை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை. நான் அவருடையை பேச்சை முழுமையாக கேட்டேன். அதில் யாரையும் புண்படுத்தும் வகையில் தவறாக பேசவில்லை, அவர் சொன்னது சரியானது.

இந்த கொரோனா துயரங்களுக்கு பிறகும் பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர் மத அரசியல் செய்வது மோசமானது. ஜோதிகா தனது பேச்சில் எந்த மதத்தையும் பற்றி குறிப்பிடவில்லை.

நிஜமான சமூக அக்கறை மட்டுமே அவரது பேச்சில் பிரதிபலித்தது. அவரது பேச்சில் எந்த இடத்திலும் தவறு தெரியவில்லை. சிலரை அவரது பேச்சு வருத்தப்படுத்தி இருந்தால் அதை நாகரீகமாக சொல்லி இருக்கலாம். அவர்கள் கருத்துகளுக்கு ஜோதிகாவும் மதிப்பு அளித்து இருப்பார்.

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.