சினிமா செய்திகள்

நயன்தாராவுடன் கடற்கரையில் நின்று பேசும் காட்சி - விக்னேஷ் சிவன் வெளியிட்டார் + "||" + The scene with Nayanthara standing on the beach Vignesh Shiva

நயன்தாராவுடன் கடற்கரையில் நின்று பேசும் காட்சி - விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

நயன்தாராவுடன் கடற்கரையில் நின்று பேசும் காட்சி -  விக்னேஷ் சிவன் வெளியிட்டார்
ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை,

தென்னிந்திய திரையுலக கதாநாயகிகளில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாரா, `ஐயா' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்தார்.
ஹரி டைரக்டு செய்தார். மறைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. முதல் படமே வெற்றி பெற்றதால், நயன்தாரா ராசியான நாயகியாக கருதப்பட்டார். தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழி படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், தெலுங்கு பட உலகுக்கு சென்று, அங்கேயும் பிரபல நாயகி ஆனார். 

இந்தநிலையில், தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கு 34 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிந்து போனது. அதன்பிறகு நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து இப்போதுவரை நீடித்து வருகிறது.

இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும், கோவில்களுக்கு சென்று வருவதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் கடற்கரையில் நின்றபடி பேசும் காட்சியை விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதை ஆர்வத்துடனும், புன்னகையுடனும் கேட்டபடி நிற்கிறார் நயன்தாரா. இதுவரை வெளியிடாத இந்த வீடியோவை கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.