சினிமா செய்திகள்

விஜய் ரசிகரை பாராட்டிய மாளவிகா மோகனன் + "||" + I love this version malavika mohanan

விஜய் ரசிகரை பாராட்டிய மாளவிகா மோகனன்

விஜய் ரசிகரை பாராட்டிய மாளவிகா மோகனன்
மாஸ்டர் படக்குழுவினர் குறித்து விஜய் ரசிகர் மாற்றி அமைத்துள்ள கார்ட்டூனிற்கு மாளவிகா மோகனன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம், கடந்த 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கால் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். ‘மாஸ்டர்’ எப்போது வெளிவரும்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்பட்டது. ஆனாலும் இது உறுதிபடுத்தப்படவில்லை. மேலும் தியேட்டர்களை திறக்க தாமதமாகலாம் என்பதால் இணையதளத்தில் ‘மாஸ்டர்’ படத்தை திரையிட ஆலோசிப்பதாக தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். 

இந்தநிலையில்  மாஸ்டர் படக்குழுவினர் என்ன செய்வார்கள் என்று விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விஜய், விஜய்சேதுபதி, லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதில் மாளவிகா மோகனன் சமைப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 

அதனை பார்த்த மாளவிகா மோகனன் கற்பனையான மூவி ஹவுஸில் கூட ஒரு பெண்ணின் வேலை சமைப்பதுதானா, பெண்கள் தான் இதுபோன்ற வேலையை செய்ய வேண்டும் என்ற பாலின பாத்திரங்கள் எப்போது சாகும் என கேட்டு பதிவிட்டு இருந்தார். அதனைதொடர்ந்து அதனை சிறிது நேரத்திலேயே தனது பதிவில் இருந்து நீக்கிவிட்டார். அந்த கார்ட்டூனுக்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த கார்ட்டூனை விஜய் ரசிகர் மாற்றி அமைத்துள்ளார். அதில் மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதிலாக புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த கார்ட்டூனை பார்த்த மாளவிகா மோகனன், 'இந்த வெர்ஷனை நான் மிகவும் விரும்புகிறேன் என்றும் நான் புத்தகம் அதிகம் படிப்பேன் என்று எப்படி தெரிந்தது? என்று ரசிகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மாளவிகா மோகனனின் இந்த டுவிட்டிற்கு விஜய் ரசிகர்கள் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.