மாகாபாரத செட்டில் ஏர் கூலரா? விளக்கம் அளித்த நடிகர் முகேஷ் கண்ணா


மாகாபாரத செட்டில் ஏர் கூலரா? விளக்கம் அளித்த நடிகர் முகேஷ் கண்ணா
x
தினத்தந்தி 28 April 2020 11:54 AM GMT (Updated: 28 April 2020 11:54 AM GMT)

மாகாபாரத செட்டில் ஏர் கூலர் பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று நடிகர் முகேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

கொரோனாவால் மே மாதம் 3- ம்தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூா்தா்ஷனில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத் தொடா்களை மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த தொடா்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ராமாயணம் தொடா், தூா்தா்ஷனில் கடந்த 1987-ஆம் ஆண்டிலும், மகாபாரதம் தொடா் கடந்த 1988-ஆம் ஆண்டிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து ராமானந்த சாகரின், ஸ்ரீகிருஷ்ணா மீண்டும் ஒளிபரப்பப்படும் என தூா்தா்ஷன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில், நிதிஷ் பரத்வாஜ் கிருஷ்ணராகவும் முகேஷ் கண்ணா பீஷ்மராக நடித்திருந்தனர்.

பி.ஆர்.சோப்ரா தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்போது மறு ஒளிபரபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்ததொடர் பற்றி சில மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாயின. எல்லாவற்றையும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்ஸ் இந்த தொடரையும் விடவில்லை. தொடரின் ஒரு காட்சியில், பீஷ்மராக நடித்திருக்கும் முகேஷ் கண்ணா நிற்க, அவருக்கு பின்னால் இருக்கும் தூணில் ஏர் கூலர் வைக்கப்பட்டுள்ளது.

'பீஷ்மர் அப்பவே ஏர் கூலர் பயன்படுத்தி இருக்காரே.. இதுதான் ஆதாரம்' என்று சிலர் அந்த போட்டோவை பதிவிட்டனர். சிலர் அது ஏர்கூலர் இல்லை, தூண் டிசைன் என்று கூறினர். அதற்கும் போட்டோ ஆதாரம் காட்டிய நெட்டிசன்ஸ், இந்தாங்க நல்லா பாருங்க என்று கூறினர். இதையடுத்து சமூக வலைதளங்களில் இதுகாரசார விவாத பொருளானது. 

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்த பீஷ்மராக நடித்துள்ள முகேஷ் கண்ணா கூறுகையில், 

இந்த வைரல் மீம்ஸ் என் கவனத்துக்கும் வந்தது. இந்தப் புகைப்படம் அந்த தொடரின் காட்சியில் இருந்துதான் எடுக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது. செட்டில் ஏசி பயன்படுத்தப்பட்டது உண்மை தான் என்றும் கூறியுள்ளார். கடினமான உடைகள், நீண்ட தாடியுடன் நான் இருந்ததால் எப்போதும் சூடாகவே உணர்ந்தேன். ஷாட் முடிந்ததும் அதிக வியர்வையுடன் வந்து உட்கார்வேன். ஏர் கூலர் வேண்டும் என்று பி.ஆர்.சோப்ராவிடம் கேட்டேன். அதற்கு அவர் ஏற்பாடு செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story