சினிமா செய்திகள்

வெப் தொடரில் நடிக்கும் தெய்வமகள் வாணி போஜன் + "||" + AR Murugadoss to produce web-series starring Vani Bhojan

வெப் தொடரில் நடிக்கும் தெய்வமகள் வாணி போஜன்

வெப் தொடரில் நடிக்கும் தெய்வமகள் வாணி போஜன்
பிரபல சீரியல் நடிகையான வாணி போஜன் வெப் தொடரில் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றது.
சென்னை,

ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். தொடர்ந்து விஜய் டிவியில் ஆகா, சன் டிவியில் ஒளிபரப்பான  தெய்வமகள் உட்பட பல்வேறு டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

 ஓ மை கடவுளே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் வாணி போஜன் வெப் தொடரில் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த வெப் தொடரை,  ஏ.ஆர்.முருகதாஸின் துணை இயக்குநர் ஒருவர் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது லாக்டவுன் காரணமாக வெப் தொடரின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து இயல்பு நிலை திரும்பிய பின் வெப் தொடர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் வாணி போஜன் தற்போது தமிழில் லாக் அப், மிஸ்டர் டபிள்யூ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.