சினிமா செய்திகள்

‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ இர்பான்கான் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல் + "||" + Too soon to leave @irrfank Ji Kamal Haasan

‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ இர்பான்கான் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ இர்பான்கான் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்
‘நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன்’ இர்பான்கான் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்பான் கான் மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் நேற்று அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் தொற்று காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் இர்பான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களின் இரங்கலை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்  இர்பான் கான் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இர்பான் ஜி இவ்வளவு சீக்கிரம் போகவேண்டுமா. உங்களின் நடிப்பு எப்போதும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. எனக்கு தெரிந்த சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என விரும்பினேன். நீங்கள் நீண்ட காலம் வாழ தகுதியுடையவர். உங்கள் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...