சினிமா செய்திகள்

ஜோதிகா படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களும் இணையதளத்தில் ரிலீஸ் + "||" + Siddharth and Vaibhav films released on the website

ஜோதிகா படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களும் இணையதளத்தில் ரிலீஸ்

ஜோதிகா படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களும் இணையதளத்தில் ரிலீஸ்
ஜோதிகா படத்தை தொடர்ந்து சித்தார்த், வைபவ் படங்களும் இணையதளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் இணைய தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர். இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூர்யாவின் ‘சூரரை போற்று’ உள்பட அவர்கள் தொடர்புடைய படங்களை இனிமேல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர். இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தை இணையதளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. மேலும் 5 படங்கள் இணையதளத்தில் வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளனர். திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படங்களையும் இணைய தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சித்தார்த் நடித்துள்ள டக்கர், வைபவ் நடித்துள்ள ஆர்.கே.நகர் ஆகிய படங்களும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. டக்கர் படத்தை கிரிஷ் இயக்கி உள்ளார். திவ்யான்ஷா நாயகியாக வருகிறார். யோகிபாபு, முனிஷ் காந்த் ஆகியோரும் உள்ளனர். ஆர்.கே.நகர் படம் வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கி உள்ளார்.

சம்பத் ராஜ், கருணாகரன், டி.சிவா, சனா அல்தாப் அஞ்சனா கீர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.