சினிமா செய்திகள்

ரிஷி கபூர் மறைவு: எனது இதயம் உடைந்து விட்டது - ரஜினிகாந்த் இரங்கல் + "||" + my dearest friend RishiKapoor Rajinikanth's condolences

ரிஷி கபூர் மறைவு: எனது இதயம் உடைந்து விட்டது - ரஜினிகாந்த் இரங்கல்

ரிஷி கபூர் மறைவு: எனது இதயம் உடைந்து விட்டது - ரஜினிகாந்த் இரங்கல்
நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை, 

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  ரிஷி கபூரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

நேற்று முன்னணி நடிகரான இர்ஃபான் கான் அகால மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு புகழ்பெற்ற நடிகர் மரணமடைந்திருப்பது பாலிவுட் நட்சத்திரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.