சினிமா செய்திகள்

ரிஷி கபூர் மரணம்: என் நண்பரை இழந்துவிட்டேன் - கமல்ஹாசன் இரங்கல் + "||" + Will miss my friend Kamal Haasan

ரிஷி கபூர் மரணம்: என் நண்பரை இழந்துவிட்டேன் - கமல்ஹாசன் இரங்கல்

ரிஷி கபூர் மரணம்: என் நண்பரை இழந்துவிட்டேன் - கமல்ஹாசன் இரங்கல்
ரிஷி கபூரின் மரணச் செய்தியைத் தன்னால் நம்ப முடியவில்லை என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,

பிரபல பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் அவருக்கு வயது 67. 

1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், 1973-ல் கதாநாயகனாக அறிமுகமானார். பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்பட்டார். பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷிகபூரின் மறைவிற்கு பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மறைவு நம்ப முடியவில்லை. ரிஷி கபூரும் நானும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருந்தோம்.  என் நண்பரை இழந்துவிட்டேன்.  அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.