சினிமா செய்திகள்

மே 3-ம் தேதி வரை டுவிட்டரிலிருந்து விலகுகிறேன்; நடிகர் விவேக் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி + "||" + I m off from all social media till May 3rd Vivekh actor

மே 3-ம் தேதி வரை டுவிட்டரிலிருந்து விலகுகிறேன்; நடிகர் விவேக் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

மே 3-ம் தேதி வரை டுவிட்டரிலிருந்து விலகுகிறேன்; நடிகர் விவேக் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி
மே 3-ம் தேதி வரை டுவிட்டரிலிருந்து விலகுகிறேன் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.
சென்னை,

கொரோனா காலக்கட்டத்தில் அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வந்தார் நடிகர் விவேக். இந்நிலையில் மே 3 ம் தேதி வரை சமூகவலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் கூறியதாவது:- 

அன்பான ரசிகர்களே, நண்பர்களே, தனிப்பட்ட காரணங்களுக்காக மே 3 ம் தேதி வரை டுவிட்டரிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ளார்.

நடிகர் விவேக் கடைசியாக வெளியிட்டிருந்த கொரோனா விழிப்புணர்வு வீடியோவில், நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். மக்களே, இளைஞர்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். முழுமையான ஊரடங்கை நாம் பின்பற்றி எப்படியாவது இந்த தொற்று குறைந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று வரும் போது தான் நாம் வெளியே வர முடியும்.

அது நம் கைகளில் தான் இருக்கிறது. இனி மேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என கூறியிருந்தார்.  அதனை தொடர்ந்து, வடியாத வெள்ளம் இல்லை;விடியாத இரவு இல்லை;முடியாத துன்பமும் இல்லை!நம்பிக்கையோடு இருப்போம்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தை விட்டு வெளியேறுகிறேன் என்ற அறிவிப்பு ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நான் யாருக்கும் போட்டி அல்ல,யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள்-நடிகர் விவேக் வேண்டுகோள்
நான் யாருக்கும் போட்டி அல்ல யாரையும் யாருடனும் ஒப்பிடாதீர்கள் என்று விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.