சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம் + "||" + social media trending Aishwarya Menon Photo

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம்

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஐஸ்வர்யா மேனனின் புகைப்படம்
நடிகை ஐஸ்வர்யா மேனன் கையில் ஆமையுடன் இருக்கும் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை,

தமிழ் திரையுலகுக்கு சமீபத்தில் அறிமுகமான கேரள வசீகரம், ஐஸ்வர்யா மேனன். தனது பூர்வீகம் கேரளா என்றாலும், ஐஸ்வர்யா மேனன் பிறந்தது ஈரோடு. வளர்ந்தது சென்னை. சமீபத்தில், ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளியான "நான் சிரித்தால்" படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த படத்தின் மூலமே இவர், பலருக்கும் தெரிந்த முகமானார். இப்போது சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்புக்கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையுடன் இவர் எடுத்த போட்டோ ஷூட் செம ட்ரெண்டானது. 

இந்நிலையில் தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், கறுப்பு நிற ஆடையில், அழகான லூஸ் ஹேருடன் கையில் ஒரு குட்டி ஆமையை பிடித்துக்கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் இயல்பாக அழகாக இருக்கிறது. இதைப்பார்த்த, நெட்டிசன்களும் இதை கருத்தை பதிவிட்டு, பல லைக்குகளை குவித்து வருகின்றனர்.