என் பெயரில் நிறைய போலி கணக்குகள்: நிவேதா பெத்துராஜ் ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்
தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் இருப்பதாகவும் அதை ரசிகர்கள் பின் தொடர வேண்டாம் என்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழில் 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்தார். 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். அடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. பின்னர் விஜய் ஆண்டனி ஜோடியாக, 'திமிரு பிடிச்சவன்', விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஹிட்டான அல்லு அர்ஜுனின், அலா வைகுந்தபுரம்லோ படத்தில் நடித்திருந்தார். இப்போது தமிழில் ஹிட்டான 'தடம்' படத்தின் ரீமேக்கான 'ரெட்'டில் நடித்துள்ளார்.
இப்போது பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
இந்தநிலையில் தற்போது சமூக வலைதளங்களில் நடிகர், நடிகைகள் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு பிரபலங்களும் இது தொடர்பாக புகார் அளித்து வருகிறார்கள். இதனிடையே, நிவேதா பெத்துராஜ் பெயரிலும் பல போலி கணக்குகள் செயல்பட்டு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் டுவிட்டர் தளத்தில் @nivetha_tweets என்ற கணக்கை மட்டுமே நிர்வகித்து வருகிறேன். எனது பெயரில் பல போலியான டுவிட்டர் கணக்குகள் இருப்பதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். டுவிட்டர் தளம் போலியான டுவிட்டர் கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த கொரோனா அச்சுறுத்தலால் அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் மேலும், எனது கணக்கை அதிகாரபூர்வமாக்குவதற்கும் சிறிது காலம் எடுக்கும். ஆகையால் இந்தக் கணக்கை மட்டும் பின்தொடருங்கள் என ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
Hey guys, there are numerous fake accounts floating on Twitter. @Nivetha_Tweets is my only Twitter ID. Don't encourage fake accounts. Working on getting verifying this handle soon. Thanks :) pic.twitter.com/6xY0qt2YrG
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) May 3, 2020
Related Tags :
Next Story